Sunday, June 28, 2015

How to repair your Broken Boot menu

Booting is one of the important process happen in our computer during start up. It shows installed operating systems as a list. If we have multiple os say Ubuntu and Windows , Ubuntu 's grub boot menu will over write Windows boot loader. When we uninstall Ubuntu , it's grub menu will go and we won't get Windows boot loader. It will always shows Grub errors when we turn on our computer. Boot- repair software can be used repair boot options and it will replace Windows boot loader back. So we can access Windows without re install.

Boot Repair is actually a Linux distribution , it have many useful tools like Boot repair , OS uninstaller etc..It is Linux os with LXDE Interface.Here are some screenshots.

How to Repair Boot option
Boot Repair Disk
Above image shows Boot Repair Disk.In additional to Repairing tools it also add a web browser to browse Internet. It didn't has any video player or other type of softwares. Size of this software is around 362MB.

Boot Repair
Boot repairing 

Software's
This software very useful ,

How to Use

1. Download Boot Repair Disk iso file
2.Create an USB Bootable disk ( USB/CD)
3. Insert CD or USB Pendrive
4. Select USB Pendrive from Boot option

Load OS

It will automatically start boot repair tool if not start Boot repair manually. Follow instruction and fix your computer.

Download: Boot Repair OS     Ubuntu secured Boot repair 

Friday, May 29, 2015

வைரஸ்களை கண்டறிய ஒரு மென்பொருள்

 நமது நண்பர்களிடம் உள்ள கோப்புகளை சோத்தித்து பார்ப்பதற்காக வாங்கி வருவோம். அப்போது கூடவே வைரசும் வருகிறதா என்ற ஒரு சந்தேகம் நமக்கு இருக்கும். அதனை நம்முடைய கணினியில் உள்ளிட்டு நம்முடைய கணிப்பொறியில் உள்ள ஆண்டிவைரஸ் மூலம் ஸ்கேன் செய்து பார்ப்போம் ஆனால் முடிவு வேறு விதமாக இருக்கும். வைரஸ் இருப்பதாக நம்முடைய ஆண்டிவைரஸ் கூறும். ஆனால் நம்முடைய நண்பருடைய கணினியில் ஸ்கேன் செய்த போது எந்த விதமான வைரசும் இல்லை என அந்த கணினியில் உள்ள ஆண்டிவைரஸ் கூறும். இதில் எது உண்மை என ஆராய்ந்து பார்த்தால் நம்முடைய கணினியில் நிறுவப்பட்டுள்ள ஆண்டிவைரஸ் கூறியதே உண்மையாக இருக்கும். இதுபோன்ற குழப்பங்கள் ஏற்பாடாமல் தவிர்க்க ஒரு ஆண்டிவைரஸ் ஸ்கேனர் உள்ளது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும். பின் இந்த மென்பொருளை கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும், ஒப்பன் ஆகும் விண்டோவில் எந்த கோப்பினை சோதிக்க வேண்டுமோ ட்ராக் அன்ட் ட்ராப் செய்யவும். பின் சில வினாடிகளில் உங்களுடைய கோப்பானது சோதிக்கப்பட்டு முடிவு கூறப்படும்.

 
உங்களுடைய விருப்பபடி இந்த மென்பொருளின் செட்டிங்சை மாற்றியமைத்து கொள்ள முடியும்.இந்த மென்பொருளில் 20எம்.பி அளவுடைய கோப்புகளை மட்டுமே சோதிக்க முடியும். இந்த மென்பொருளானது விண்டோஸ் ஏழு (32,64)பிட் களில் இந்த மென்பொருளானது இயங்க கூடியது ஆகும். இந்த மென்பொருளின் சிறப்பம்சம் என்னவெனில் பல ஆண்டிவைரஸ்களில் ஒரே நேரத்தில் ஸ்கேன் செய்யக்கூடியது ஆகும். இதன் மூலம் எந்த ஆண்டிவைரஸ் சிறப்பானதாய் உள்ளது எனவும் நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

லோகோக்களை உருவாக்க Logo Creator இலவசமாக

லோகோ என்பது முழுவிவரத்தையும் குறிப்பிடும் முத்திரையாகும், லோகோ என்பது ஒரு முக்கியமான அடையாளம் ஆகும். இதை நாம் அனைத்துவிதமான வலைப்பக்கங்களிலும் மற்றும் நிறுவனத்தின் குறியீடாகவும் பார்க்க முடியும். இந்த லோகோக்களை உருவாக்க நாம் போட்டோசாப் அல்லது வேறு எதாவது ஒரு மென்பொருளின் உதவியினை நாட வேண்டும். இது மாதிரியான லோகோக்களை உருவாக்க ஒரு மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. இந்த மென்பொருளின் சந்தை விலை $29.95 ஆகும். தற்போது இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. இந்த லோகோ கிரியேட்டர் மென்பொருளானது மேக் மற்றும் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திற்கு மட்டுமே இலவசமாக தற்போது கிடைக்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய உங்களிடம், முகநூல் (Face Book) கணக்கு இருக்க வேண்டும். சுட்டியினை கிளிக் செய்து குறிப்பிட்ட தளத்திற்கு சென்று உங்களுடைய முகநூல் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். மென்பொருளை தரவிறக்கம் செய்ய Like என்னும் பொத்தானை கிளிக் செய்ய வேண்டும். 

இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணிப்பொறியில் நிறுவிக்கொள்ளவும். பின் மென்பொருளை ஒப்பன் செய்யவும், அதில் ஏற்கனவே லோகோ டெம்பிளேட்கள் இருக்கும், அதை தேர்வு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். இல்லையெனில் புதியதாக நீங்களே ஒரு லோகோவினை உருவாக்கி கொள்ள முடியும். இந்த மென்பொருளில் எடிட்ங் வேலைகளை மிகவும் எளிமையாக செய்ய முடியும். இந்த மென்பொருளில் உருவாக்கிய லோகோக்களை பல்வேறு விதமான பார்மெட்களில் சேமித்துக்கொள்ள முடியும்.


இந்த லோகோ கிரியேட்டர் மென்பொருளின் உதவியுடன் மிகவும் எளிமையான முறையில் லோகோக்களை உருவாக்கி கொள்ள முடியும்.

ZIP/RAR பைல்களுக்கு பாஸ்வேர்ட் உருவாக்குவது எப்படி



டாக்குமெண்ட்களை சுருக்க  பயன்படும் பார்மெட்தான் ஜிப் பைல் பார்மெட் ஆகும். இதன் மூலம் அதிகமாக உள்ள பைலின் அளவை குறைக்க முடியும். நம்மிடம் ஒரு பத்து புகைப்படங்கள் உள்ளன, அவை அனைத்தையும் ஒரே பைலாக ஈமெயில் செய்ய வேண்டும் என்ன செய்வோம் உடனே அவை அனைத்தையும் பிடிஎப்,வேர்ட் அல்லது வேறொரு பைலாக மாற்றம் செய்து அனுப்ப முயற்ச்சிப்போம், ஆனால் குறிப்பிட்ட படங்கள் அனைத்து அதனுடைய தரம் குறையாமல் அதே பார்மெட்டில் ஒரே பைலாக அனுப்ப வேண்டுமெனில் நாம் நாடுவது ZIP,RAR,7Z மற்றும் பல பைல் பார்மெட்கள் ஆகும். மொத்தத்தில்  ZIP/RAR பைல்களை கணினி பயனாளர்கள் பயன்படுத்துவதே பைல் அளவை குறைப்பதற்க்குதான். சரி நான் சொல்ல வந்த விஷயத்தை விட்டிட்டு ஏதோ சொல்கிறேன். சரி நான் நேரிடையாக விஷயத்திற்கு வந்து விடுகிறேன். வேர்ட், பிடிஎப் பைல் பார்மெட்களுக்கு எல்லாம் கடவுச்சொல் இட்டு பூட்டமுடிகிறது. அதே போல் ஜிப் பைல்களுக்கும் கடவுச்சொல் இட்டு எவ்வாறு பூட்டுவது என்று ஒரு சந்தேகம் அதற்கான பதில் கீழே.

ஜிப் பைல்களுக்கு கடவுச்சொல் இட்டு பூட்ட:-

முதலில் எந்தெந்த பைல்களை எல்லாம் ஜிப் பைலாக உருவாக்க நினைக்கிறீர்களோ அதனை தேர்வு செய்து, ஒரே போல்டரில் அடைக்கவும். பின் போல்டரின் மீது வலது கிளிக் செய்து தோன்றும் பட்டியலில் winzip என்பதை தேர்வு செய்து Add to .zip என்பதை தேர்வு செய்து ஜிப் பைலை உருவாக்கி கொள்ளவும். 


இப்போது ஜிப் பைலானது உருவாகியிருக்கும். அடுத்ததாக winzip அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.  அதில் Encrypt என்னும் செக் பாக்சில் டிக் செய்யவும். அடுத்தாக  zip என்னும் ஐகானை தேர்வு செய்யவும், தோன்றும் விண்டோவில் உங்களுடைய ஜிப் பைலை தேர்வு செய்யது Zip என்னும் பொத்தானை அழுத்தவும். 


Zip பொத்தானை அழுத்தியவுடன், கடவுச்சொல்லை உருவாக்குவதற்கான விண்டோ ஒப்பன் ஆகும், அதில் குறிப்பிட்ட Zip பைல்கான கடவுச்சொல்லை உள்ளிட்டு ஒகே பொத்தானை அழுத்தவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் கடவுச்சொல் உள்ளிடப்பட்ட Zip பைலை எங்கு சேமிக்க வேண்டும் என்பதை தேர்வு செய்து ஒகே பொத்தானை அழுத்தவும். இப்போது நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் ஒரு ஜிப் பைல் இருக்கும் கடவுச்சொல் இணைக்கப்பட்டு. நீங்கள் புதியதாக உருவாக்கிய பெயரில் இருக்கும். இதனுடைய முழுஅர்த்தம் என்னவெனில் நீங்கள் உருவாக்கிய ஜிப் பைல்களுக்கு கடவுச்சொல் உருவாக்க, மீண்டும் அதே ஜிப் பைலை மற்றொரு ஜிப் பைலக உருவாக்குகிறோம்.

ரேர் பைல்களுக்கு கடவுச்சொல் இட்டு பூட்ட:-
முதலில் கூறியவாறே ஒரு போல்டரில் டாக்குமெண்ட்களை உள்ளிட்டு கொள்ளவும். பின் வலது கிளிக் செய்து தோன்றும் வரிசையில் Add to Archive என்பதை தேர்வு செய்யவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில், Advance என்னும் டேப்பை தேர்வு செய்து Set password என்னும் பொத்தானை அழுத்தவும். 


SetPassword பொத்தானை அழுத்தியவுடன் தோன்றும் விண்டோவில் உங்களுக்கான கடவுச்சொல்லை உள்ளிட்டு ஒகே பொத்தானை அழுத்தவும். இப்போது கடவுச்சொல் உள்ளிடப்பட்டு Rar பைலானது உருவாகியிருக்கும்.

PDF to Word கன்வெர்டர் மென்பொருள் லைசன்ஸ் கீயுடன்



மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவாக்கிய வேர்ட் பைல்களை நாம் பிடிஎப் பைல்களாக கன்வெர்ட் செய்து வைத்திருப்போம். ஒருசில நேரங்களில் வேர்ட் பைலை அழித்துவிட்டு பிடிஎப் பைலை மட்டும் வைத்திருப்போம். அந்த நேரத்தில் குறிப்பிட்ட வேர்ட் பைலில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் நம்முடைய பாடு திண்டாட்டம் தான். இதுபோன்ற சமயங்களில் பிடிஎப் பைலை எப்படியாவது கன்வெர்ட் செய்து வேர்ட் பைலாக மாற்றி எடிட் செய்துவிட வேண்டும் என்று நினைத்து இணையத்தில் இதற்கான உதவியை நாடி செல்வோம். ஆன்லைன் மூலமாக கன்வெர்ட் செய்யலாம் என்றால் சரியான முறையில் கன்வெர்ட் ஆகாது. எதாவது ஒரு மென்பொருளை தரவிறக்கி அதன் மூலம் கன்வெர்ட் செய்துவிடலாம் என்றால் அதுவும் முடியாது. நாம் தேடிபோகும் மென்பொருளில் எதாவது ஒருசில குறைகள் இருக்கும். குறிப்பாக அந்த மென்பொருளானது பணம் செலுத்தி பெற வேண்டியதாக இருக்கும். அப்படியே இலவசமாக மென்பொருள் கிடைத்தாலும் அது சரியாக வேலை செய்யாது. இதுபோன்ற குறைகள் எதுவும் இல்லாமல் ஒரு மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. அதுவும் இலவச லைசன்ஸ் கீயுடன்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி 



சுட்டியில் குறிப்பிட்ட பகுதிக்கு சென்று மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளவும். லைசன்ஸ் கீயும் தரவிறக்க பகுதியிலேயே இருக்கும். YCUKF-HV9HY-DGY2X-WL735 இந்த கீயை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக கணினியில் பதிந்து கொள்ளவும். இந்த மென்பொருளை நீங்கள் இலவசமாக 2011 ஏப்ரல் 25 வரை மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடதக்கது. பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.


பின் எந்த பைலை கன்வெர்ட் செய்ய வேண்டும் அந்த பிடிஎப் பைலை தேர்வு செய்து நுழைக்கவும். பின் எந்த இடத்தில் கன்வெர்ட் செய்த பைலை சேமிக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு கொள்ளவும். பின் Convert என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்த சில மணி நேரங்களில் உங்களுடைய பைலானது வேர்ட் பைலாக கன்வெர்ட் செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்.


இதுபோல பைலை கன்வெர்ட் செய்யும் போது வேண்டுமானால் குறிப்பிட்ட பக்கங்களை மட்டும் கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளில் ட்ராக் அன்ட் ட்ராப் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. இவ்வாறு நாம் கன்வெர்ட் செய்யும் போது மைரோசாப் வேர்ட் தொகுப்போ பிடிஎப் ரீடரோ எதுவும் தேவையில்லை. கடவுச்சொல் புகுத்தப்பட்ட பைல்களையும் கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். பிடிஎப் பைலில் இருக்கும் படம், எழுத்து ஆகியவை சரியான முறையில் கன்வெர்ட் செய்யப்படும். ஒரே நேரத்தில் பல்வேறு பிடிஎப் பைல்களை கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளானது விண்டோஸ் 98, ME, NT, 2000, XP, 2003, Vista மற்றும் விண்டோஸ் 7 ஆகிய இயங்குதளங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும்.  இந்த மென்பொருளுடைய சந்தைவிலை $29.95 ஆகும்.

NTFS to FAT32 கன்வெர்ட் செய்ய இலவச மென்பொருள்


கணினியில் இயங்குதளத்தை நிறுவும்போதே வனதட்டினை பகுதிகளாக பிரித்து வைத்திருப்போம். இவ்வாறு வன்தட்டினை பிரித்து நாம் முழுமையாக பயன்படுத்த வேண்டுமெனில் அதனை ஒரு பைல் பார்மெட்டில் கன்வெர்ட் செய்ய வேண்டும். விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் புகழ்பெற்ற பைல் பார்மெட்கள் NTFS மற்றும் FAT பைல் பார்மெட்கள் ஆகும். இந்த பைல் பார்மெட்களை நாம் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டம் நிறுவும் போதே பிரித்து விடுவோம். NTFS பைல் பார்மெட்டானது நெட்வொர்க்கில் கோப்புகளை பரிமாறிக்கொள்ள பயன்படும். மற்றும் நெட்வொர்க்கில் கணினியை பரிமாறிக்கொள்ளவும் முடியும். முதலில் வன்தட்டினை பிரிக்கும் போது ஒரு சில நேரங்களில் FAT பைல் பார்மெட்டில் வன்தட்டினை பிரித்து விடுவோம். அதனை NTFS பைல் பார்மெட்டாக மாற்ற ஒரு இலவச மென்பொருள் உதவுகிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, உங்களது மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு ஒகே பொத்தானை அழுத்தவும். பின் உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு மென்பொருளை பதிவிறக்கம் செய்வதற்கான சுட்டி அனுப்பி வைக்கப்படும். அதை பயன்படுத்தி மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.






இந்த மென்பொருளை பயன்படுத்தி NTFS பைல் பார்மெட்டை FAT பைல் பார்மெட்டாகவும். FAT பைல் பார்மெட்டை NTFS பைல் பார்மெட்டாகவும் மாற்றி கொள்ள முடியும். எந்த வித தகவல் இழப்பும் இன்றி மாற்றிக்கொள்ள முடியும்.

கணினியில் நிறுவிய மென்பொருள்களை அகற்ற


நம்முடைய பயன்பாட்டிற்கு ஏற்றவாறு கணினியில் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம். நாளடைவில்  குறிப்பிட்ட சில மென்பொருள்களை பயன்படுத்துவதையே நிறுத்திவிடுவோம். அவ்வாறு கணினியில் அதிகமான மென்பொருள்கள் இருக்கும். மேலும் ஒரே பயன்பாட்டிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம். அவ்வாறு இருக்கும் மென்பொருள்களால் கணினியின் இயக்கத்தில் தடைப்படும். இவ்வாறு கணினியில் தேவையில்லாமல் இருக்கும் மென்பொருள்களை கணினியை விட்டு நீக்குவதற்கு விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திலேயே வழி உள்ளது. ஆனால் அது ஒரு சில மென்பொருள்களை சரியாக கணினியை விட்டு நீக்கம் செய்யாது. இவ்வாறு கணினியை விட்டு நீக்க முடியாத மென்பொருள்களை கணினியை விட்டு நீக்கம் செய்ய மூன்றாம் தர மென்பொருளின் உதவியுடன் நீக்கம் செய்ய முடியும். அந்த வகையில் நமக்கு உதவி செய்யும் மென்பொருள்தான் Ainvo Uninstall Manager.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒருமுறை கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் அந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் Find Programs என்னும் சுட்டியை அழுத்தி கணினியில் நிறுவப்பட்ட மென்பொருள்களை ஆராயவும். Remove Programs என்னும் சுட்டியை அழுத்தவும். 


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் தேவையில்லாத அப்ளிகேஷன்களை தேர்வு செய்து, பின் Uninstall என்னும் சுட்டியை அழுத்தி கணினியை விட்டு அப்ளிகேஷனை நீக்கி கொள்ள முடியும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். விண்டோஸ் இயங்குதளத்தால் நீக்க முடியாத மென்பொருள்களையும் இந்த மென்பொருள் மூலமாக நீக்கம் செய்ய முடியும்.